திருநங்கை வேடத்தில் நடிக்கவே விருப்பம் : ரஜினிகாந்த்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘தர்பார்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

தமிழ் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள தர்பார் படத்தின் மூன்று டிரைலர்கள் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ”எனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்கவே பிடிக்காது. எல்லோரும் ஸ்டைல் ஸ்டைல் என்கிறார்கள் என்று கூறினார் . மேலும் எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு, திருநங்கை வேடத்தில் நடிக்க விரும்புவதாக பதில் அளித்துள்ளார் .