உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது : ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

சென்னை:

ள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தனத ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக  ஊரக உள்ளாட்சி களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் பங்குகொள்ள மாட்டோம் என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது  நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அறிவித்து இருந்தார். ஆனால், சில மக்கள் மன்ற அமைப்பினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர்,கொடி ,ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சி ரஜினி மக்கள் மன்றம்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சிலர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: :ரஜினி மக்கள் மன்றம், Local body election, not to contest local body election, not to contest local body election tamilnadu, Rajini Makkal Mandram, Rajnikanth, உள்ளாட்சி தேர்தல், ரஜினி
-=-