ரஜினியின் அரசியல் நிலைபாட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை

சென்னை:

ஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த நிலையில் வருகின்ற 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் போராட்டம் நடத்த ராமதாஸ் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர்கள் சிலர் அனுமதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினரும், ரசிகர்களும் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சந்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற சென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முக்கிய அறிவிப்பு… நம் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.21 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடது மிறி கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.