துரை

ஜினிகாந்த் தனது கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்துவார் என ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் வந்துள்ளன.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.   அதை ஒட்டி ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றப்பட்டு உறுபினர் சேர்க்கை நடந்து வருகிறது   ஆன்மீக அரசியல் நடத்தப் போவதாக ரஜினி அறிவித்துள்ளார்.  ஆனால் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தவில்லை.

தற்போது ஆன்மீக நகரமான மதுரையில் தனது கட்சி தொடக்க விழாவை ரஜினி நடத்துவார் என சில தகவல்கள் கூறுகின்றன.    பல கட்சியினர் மதுரை நகரில் தொடக்க விழாவோ அல்லது முதல் மாநாடோ நடத்தி வெற்றி பெற்றுள்ளனர்.  திரையுலகை பொறுத்த வரை செண்டிமெண்ட் எப்போதும் முதல் இடம் வகிப்பது குறிப்பிடத் தக்கது.

தனது கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்த ஆலோசித்து வருவதால் தான் அது குறித்து முன்னோட்டமாக முப்பெரும் விழாவில் கலந்துக் கொள்ள ராகவா லாரன்ஸ் அனுப்பபட்டதாக கூறப்படுகிறது.     முப்பெரும் விழாவில் செய்யப்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடுகளும்,  கலந்துக் கொண்ட மக்களின் உற்சாகமும் ராகவா லாரன்ஸை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும் அதனால் அவர் மதுரையை சிபாரிசு செய்ததாகவும் ரசிகர் மன்றத்தினர் கூறுகின்றனர்.

ரஜினிகாந்துக்கு முதலில் ரசிகர் மன்றம் துவங்கப் பட்டது மதுரையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.