26ம் தேதி முதல் 6 நாட்கள் ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு

சென்னை:

ரஜினிகாந்த் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கிறார்.

8 வருடங்களுக்குப் பிறகு கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. இந்நிலையில் ரஜினி நேற்று முன்தினம் தனது 68வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை தொடர்ந்து வரும் 26ம் ந்தேதி முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார்.

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

தினமும் ஆயிரம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறைக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.