கருணாநிதியை நாளை சந்திக்கிறார் ரஜினி?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நாளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குச் சென்று அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து நலன் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட இந்தியாவில் படப்பிடிப்பில் இருந்த அவர் இன்று சென்னை திரும்புகிறார் என்றும் நாளை காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.