Random image

தனது கொள்கைக்கு ரியல் ஓனரான அண்ணாச்சியை சந்தித்தார் ரஜினி

னிக்கட்சி துவங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தான் ஆன்மிக அரசியல் செய்யப்போவதாகவும்  தனது கட்சியின் கொள்கை, “உண்மை உழைப்பு உயர்வு” என்றும் அறிவித்தார்.

இதைக் கேட்ட பலருக்கு அதிர்ச்சியானது. காரணம் காலம்காலமாக பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஸ்லோகன் இது.

இதை அப்படியே எடுத்து தனது கொள்கை என்கிறாரே ரஜினி என்று சமூகவலைதளங்களில் பலரும் கிண்டல் செய்தனர்.

இந்த நிலையில் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு கிளம்பி மலேசியா  சென்றார்.

இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சரவணா ஸ்டோர் உரிமையாளரான சரவணன் – ரஜினி சந்தித்துப் பேசினர்.

அவரிடம் தனது அரசியல் கொள்கை பற்றி ரஜினி கலந்துரையாடியானா என்று தெரியவில்லை.

சரவணன் தற்போது தனது நிறுவன விளம்பரங்களில் தோன்றி நடித்துவருகிறார். இது குறித்தும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். அடுத்து சரவணன் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன.

ஆகவே நடிப்பு குறித்து ரஜினியிடம் அவர் அட்வைஸ் கேட்டாரா என்பதும் தெரியவில்லை.