சென்னை:

டிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பிவிட்ட நிலையில், இன்று மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். தற்போது ஆலோசனை முடிவடைந்துள்ள நிலையில், ரஜினி அரசியல் குறித்து என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சிஸ்டத்தை  மாத்தணும். உண்மையான நாணயமான வெளிப்டையான சாதி மத வேறுபாடு இல்லாத ஆன்மிக அரசியல் கொண்டுவருவேன் என்று அறிவித்து 2 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், தற்போது ரஜினி அரசியல் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சிஏஏ குறித்தும்,டெல்லி கலவரம் குறித்தும் அவர் விமர்சனம் செய்தார். இதனால் அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தனது  ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த  ‌38 மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  அவர்களுடன் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். அவர்களுடன் கட்சியின் பெயர், கொடி மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

தற்போது ஆலோசனை முடிவடைந்த நிலையில், ரஜினி தனது அரசியல் பிரவேசம், கட்சி பெயர் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.