ரஜினிக்கு பத்திரிகை ஆலோசகர் தேவை: நடிகை கஸ்தூரி கிண்டல்

--

சென்னை:

டிகர் ரஜினிகாந்துக்கு பத்திரிகை ஆலோசகர் தேவைப்படுகிறது என்றும், அவர் செய்தி யாளர்கள் சந்திப்பின்போது எதிர்பாராத கேள்விகளால் தள்ளாடுகிறார் என்றும் நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு நேற்று விமான நிலையத்தில் ரஜினி அளித்த பதில், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ரஜினியின் இந்தக் கருத்தை கிண்டல் செய்து சமூக வலைதளமான டிவிட்டரில் #எந்த7பேர் என்ற ஹேஷ்டேக் வைரலாகியது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி, ரஜினியின் அறியாமை குறித்து கிண்டல் செய்து டிவிட்டியிருந்தார். அதில்,  முதல்வராக வேண்டும் என கனவு காணும் ரஜினிக்கு அறியாமை பொருத்தம் இல்லை என‘ சாடியிருந்தார்.

மேலும், தமிழகத்தில் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வரும்  எவரும் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை தெரியாமல் எப்படி இருக்க முடியும்?  திருவாளர் ரஜினியின் இதயம் சரியான இடத்தில் இருக்கலாம். இருந்தாலும் அவர் தமிழகப் பிரச்சினைகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். இது ஒன்றும் அப்பாவித்தனம் இல்லை. இது அறியாமை. இன்னும் மோசமாக சொல்ல வேண்டும் என்றால் அக்கறையின்மை.”

தனது சினிமா செல்வாக்கினால் முதல்வர் நாற்காலி கனவை காண்கிறார் ரஜினி . ஆனால் அதற்கு அடிப்படையான நிர்வாக,அரசியல் , சமூக நல அறிவு அவரிடம் இல்லை, “ரஜினி சாரின் பொறுப்புணர்ச்சி குறித்து எல்லோரும் என்னிடம் விளக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அவருக்கு அந்த 7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் சொல்லவில்லை. அவரே ஒப்புக் கொள்கிறார், அந்த விவகாரத்தில் நடப்பு விஷயத்தை அறியவில்லை எனக் கூறுகிறார். இது முதல்வர் ஆசை கொண்ட ஒருவருக்கு நிச்சயமாக பொருத்தமானது அல்ல.

இதற்கு பதிலளிக்க எந்த விளக்கத்தையும் சொல்லத் தேவையில்லை. கடந்த சில நாட்களில் செய்திகளை வாசித்திருந்தாலே எந்த 7 பேர் என்பதையும் அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். பத்திரிகையாளர்களும் கேள்வியில் மிகத் தெளிவாக ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை எனக் குறிப்பிட்டுக் கேட்கின்றனர்.” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தலைவர்கள் அரசியல் அறிவை அன்றாடம் தீட்டி வைத்திருக்க வேண்டும் என்றும் ரஜினிக்கு ஆலோசனை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில்,  நேற்றைய கேள்விக்கு  இன்று ரஜினி விளக்கம் அளித்தது குறித்தும் கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.

செய்தியாளர்களின் எதிர்பாராத கேள்விக்கனைகளை எதிர்கொள்ள போராடுகிறார் என்றும்,  ரஜினிகாந்துக்கு பத்திரிகை ஆலோசகர் தேவைப்படுகிறது என்றும் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

You may have missed