வருவாருன்னு நினைக்கலே… வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்… ரஜினி, கமல் அரசியல் குறித்து நடிகை கஸ்தூரி கலாய்ப்பு…

சென்னை: அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருக்கும் நடிகர் ரஜினியையும், அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறிக்கொண்டு,  கட்சியை  நடத்தி வரும் நடிகர் கமல், அரசியலை பகுதிநேர தொழிலாக வைத்துக்கண்டு, சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இருவரையும் சேர்த்து நடிகை கஸ்தூரி செமையாக கலாய்த்துள்ளார்.

சமீபத்தில் ரஜினி அரசியல் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. பின்னர், அதற்கு ரஜினி விளக்கம் அளித்தார். அறிக்கை என்னுடையது அல்ல, ஆனால் அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மை என்று கூறினார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் அரைவேக்காட்டுத் தனத்தையும், நடிகர் கமலின் புரியாத பாஷையையும் சேர்த்து, நடிகை கஸ்தூரி கடுமையாக நக்கலடித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில், ரஜினிபத்தி கமல் ஸ்டைலில் சொல்றேன்… வருவாருன்னு நினைக்கலே… வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்… என இருவரையும் செமையாக கலாய்த்துள்ளார்.

மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது – ரஜினி