பிக் பாஸ் வீட்டிலிருந்து அகற்றப்பட்ட ‘பேட்ட’ ரஜினி ஓவியம்….!

பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 3-வது சீஸன், நேற்று (ஜூன் 23) முதல் தொடங்கியுள்ளது.

ஃபாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா ஆகிய 15 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

இந்த சீஸனில் ‘பிக் பாஸ்’ வீடு தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள் என வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இடம்பெற்றிருந்த ‘பேட்ட’ ரஜினி ஓவியம், நேற்று நிகழ்ச்சியில் அகற்றப்பட்டிருந்தது..

Leave a Reply

Your email address will not be published.