ரசிகர்கள் முன்னிலையில் தமிழக மக்களுக்கு ரஜினி பொங்கல் வாழ்த்து…!

மிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், தன்னை சந்திக்க வந்திருந்த ரசிகர்கள் முன்னிலையில், தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் அறுவடை திருநாளான பொங்கல் திருநாளை உற்சாகமாக வரவேற்று கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ரஜினி ரசிகர்கள் பலர் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லம் முன் குவிந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி, தமிழக மக்களுக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார். அப்போது,   இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மன நிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்.