“அறம்” இயக்குநரை அழைத்து பாராட்டிய ரஜினி!

“அறம்” படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது படக்குழுவை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கறது. அவர்களது உற்சாகம் மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

நேற்று, “அறம்” இயக்குநர் கோபி நயினாரை அலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறார் ரஜினி.

“படம் பார்த்தேன். ரொம்ப.. ரொம்ப ரொம்ப அருமையா பண்ணியிருக்கீங்க.. வாழ்த்துகள்!” என்ற ரஜினி, விரைவில் சந்திக்கலாம் என்றும் கூறினாராம்.

கோபி நயினார், ரஜினியின் ஃபேவரைட் இயக்குநராக ஆகிவிட்ட பா.ரஞ்சித்தால் ஏமாற்றப்பட்டவர் என்கிற பேச்சு இருக்க.. ரஜினியே அழைத்துப் பாராட்டியதோடு, சந்திக்கவும் வேண்டும் என்று தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னொரு புறம், “ஓடுற குதிரையில் ஏறிப் பறக்கத் தெரிந்தவர் ரஜினி.  தான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், ரிஸ்க் எடுக்க மாட்டார். நெம்பர் ஒன் ஹீரோயின், சிறந்த இயக்குநர்… இப்படித் தேர்ந்தெடுத்துத்தான் தனது படத்துக்கு ஆள் சேர்ப்பார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்த நயன்தாராவை சிறப்பாக பயன்படுத்தி படம் எடுத்திருக்கிறார் அறம் கோபி. ஆகவே  ஆண் சூப்பர் ஸ்டாரான தனக்கு படம் பண்ணச் சொல்லி கேட்பார் போலும்” என்றும் கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.