இன்று இரவு சென்னை திரும்புகிறார் ரஜினி… : கட்சி பெயர் அறிவிப்பு எப்போது?

சென்னை:

மிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, அவ்வப்போது ஓய்வெடுக்க வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஓடிவிடுகிறார்.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டு ஓய்வெடுத்து வரும் ரஜினி இன்று இரவு சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து விரைவில் கட்சியின் பெயரை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்சியை தொடங்குவதாக கடந்தஆண்டு டிசம்பர் இறுதியில் அறிவித்த ரஜினி, இன்னும் கட்சியின் பெயர் மற்றும் கொள்கை குறித்து  இதுவரை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவ்வப்போது ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு, அவரது ரசிகர்களை விசிலடிக்க வைத்துவிட்டு, வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் ஜாலியாக சுற்றித்திரிந்த  நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சென்னை திரும்புகிறார்.

இதைத் தொடர்ந்து ரஜினியின் ஆன்மிக அரசியல் பயணம் மீண்டும் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் கட்சியின் பெயரை அறிவித்து தீவிர அரசியலில் ஈடுபடுவரா அல்லது காலா படம் வெளியானதும் மீண்டும் ஓய்வெடுக்க சென்றுவிடுவாரா என கேள்விக்குறியுடன் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி