சென்னையில் தொடங்குகிறது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு….!

சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மார்ச் 15-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இதற்காக ரஜினியுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் அனைவரிடமும் தேதிகள் வாங்கப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 30 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.

‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.