பெரியார் குறித்து ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெறப்போகிறாரா ரஜினி? அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

பெரியார் குறித்த பழைய நிகழ்வுகளை பேசி,  ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெறப்போகிறாரா ரஜினி?  என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

துக்ளக் விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்மீது திக, திமுக உள்பட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும், நீதிமன்றத்தில் ரஜினி மன்னிப்பு கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  பழைய நிகழ்வுகளை பற்றி பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிகாந்திற்கு பி.ஹெச்.டி பட்டமா கொடுக்கப் போகிறார்கள் . அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது என்றும்,  நடிகர் ரஜினிகாந்த்,  இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என அதை ஞாபகப்படுத்தி தன்னுடைய கருத்திலேயே ரஜினி முரண்பாடாக உள்ளார் என்றும்  கூறினார்.

 

கார்ட்டூன் கேலரி