இங்கே ரஜினி என்ன பார்க்கிறார் தெரியுமா?

அர்ஜூன் நடிக்கும் 150 வது படம் “நிபுணன்”.

இந்த படத்தினஅ டீசரை, வித்தியாசமான முறையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட்  செய்து வாழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அவர்களில் முதல் நபர்.. ரஜினிகாந்த்.

 

சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் உட்பட  படக் குழுவினர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது குறித்து இயக்குநர் அருண் வைத்ய நாதன், ““ரஜினி சார் ‘நிபுணன்’ படத்தின் டீசரை பார்த்தார்.  மிக மிக உற்சாகமாகி எங்களை பாராட்டினார். ‘This is sure shot winner’ என்று அவருக்கே உரிய பாணியில் பாராட்டியதோடு , தான் நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார். அர்ஜுன் சாருக்கும் , ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்துப் போனோம். நிபுணன் டீசர் வருகின்ற 15ஆம் தேதி வெளி வர உள்ளது. அர்ஜுன் சாருடைய உழைப்பை கொண்டாட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் என்று பெருமையோடு கூறினார் இயக்குனர் அருண் வைத்ய நாதன்.

படத்தில்: “நிபுணன்” டீசரை ரசித்து பார்க்கிறார் ரஜினி