சும்மா அதிருதில்ல: ரஜினி படப்பிடிப்பால் நடு நடுங்கிய மக்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் பகுதியில் நடந்தது.

அப்போது குண்டுவைத்து, கார் தகர்க்கப்படும் காட்சி படமாக்கப்பட்டது. டம்மி குண்டு, டப்பா கார்தான். ஆனால் குண்டு வெடிப்பின் போது எழுந்த அதீத சத்தம் சாலிகிராமம் ஏரியாவையே சும்மா அதிரவைத்தது.

Rajini-Endhiran-2.0-Movie

இந்த பெரும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், ஏதோ நிஜ குண்டு வெடித்துவிட்டதோ என்று பதறிவிட்டார்கள். பிறகுதான் படப்பிடிப்பு குண்டு என்பது தெரிய வந்தது.

“மக்கள் வசிக்கும் பகுதியில் இப்படி குண்டு வைத்து பதறவைக்கலாமா” என்கிற ஆத்திரத்தில் இருக்கிறார்கள் சாலிகிராம மக்கள். அதோடு, தொடர்ந்து இப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தால்.. அதுவும் குண்டு காட்சிகள் தொடர்ந்தால் எதிர்ப்பு தெரிவிக்கவும் அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

You may have missed