சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘வியூகம்’….!

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் சேனல் நிறுவனம் ரஜினிகாந்தின் 168வது படத்தை சிவா இயக்க உள்ளார் என்றும். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயரிக்கவுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்தது .

இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரஜினியுடன் சூரி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இதனிடையே இந்தப் படத்துக்கு ‘வியூகம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் – சிவா கூட்டணி இணைந்து பண்ணப் படங்கள் அனைத்துமே ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என ’V’ சென்டிமெண்ட்டில் இருந்தது. அதை ரஜினி படத்துக்குத் தொடர முடிவு செய்து ‘வியூகம்’ என வைத்துள்ளதாகத் தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி