‘தமிழ் பேசினால் தமிழ் வளராது’ ரஜினியின் அரிய கண்டுபிடிப்பு: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை:

திமுக உயரப் பறக்கும் ஒரு பருந்து, ஊர்க் குருவிக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை  என்றும், ‘தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது’ என்று ரஜினி புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார் என்றும் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தார்.

நேற்று ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த நடிகர் ரஜினி, தமிழகத்தில் வெற்றிடம் நிலவுவதாகவும், தமிழ் பேசினால் தமிழ் வளராது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினார்.

ரஜினியின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித அமைச்சர், ரஜினியின் கேள்விக்கு கிண்டலாக பதில் அளித்தார். அப்போது, நாங்கள் வீட்டில் தமிழில் பேச சொல்கிறோம். அம்மா அப்பா என அழைக்கச் சொல்கிறோம்.ஆனால் ரஜினிகாந்த் டாடி, மம்மி என சொல்லச் சொல்கிறார் என்றார்.

மேலும், தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற ரஜினியின் உரையை தமிழ் அறிஞர்கள், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற அமைச்சர்,  ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக இருப்பதால் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது என்ற அறிய கண்டுபிடிப்பின் மூலம் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவராக ரஜினி இருக்கிறார் என்று நக்கலாக பேசினார்.

தமிழகத்தில் இதுவரை எத்தனையோ பேர்,  எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருகிறேன் எனக்கூறி அரசியலுக்கு வந்து காணாமல் போயிருக்கிறார்கள் எற்றவர,  எவ்வளவுதான் உயர பறந்தாலும் குருவி குருவிதான். பருந்து பருந்துதான்.

அதிமுக உயரப் பறக்கும், பருந்து. ஊர்க் குருவிக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு வருபவர்கள் எதாவது ஒரு குற்றச்சாட்டுகளைச் சொல்லத்தான் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி