‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை” – நன்றி தெரிவிக்கும் ரஜினிகாந்த்….!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வந்தால் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன.

ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை சமூக வலைதளத்தில் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினி தனது ட்விட்டர் பதிவில்:

“என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை” என பதிவிட்டுள்ளார் .