கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

விசு மறைவு தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில்:-

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குநர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் .