ரஜினிகிட்டே இல்லே … விஜய்கிட்ட இருக்கு!: ஹெச். ராஜா கணிப்பு

சென்னை:

டிகர் ரஜினியிடம் கறுப்பு பணம் இல்லாததால் பிரதமர் மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்பதாக தெரிவித்த ஹெச். ராஜா,  நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரிடம் கறுப்பு பணம் இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுவதாவும் தெரிவித்திருக்கிறார்.

விஜய் - ரஜினி
விஜய் – ரஜினி

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா  இன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் வணிகர்களைச் சந்தித்தார்.  எதிர்க்கட்சிகள் நாளை நடத்தவுள்ள போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “ ஊழல் செய்தவர்களும், கொள்ளையடித்தவர்களுமே நாளை நடைபெறும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்” என்றார்.

மேலும், “நடிகர் ரஜினியிடம் கறுப்பு பணம் இல்லாததால் பிரதமர் மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்கிறார்.  நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரிடம் கறுப்பு பணம் இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது” என்றார்.

.

.

கார்ட்டூன் கேலரி