தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும்  நிதி உதவி வழங்கி  உள்ளார் ரஜினிகாந்த். இதன் காரணமாக அவரது அரசியல் பிரவேசம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக மக்கள் பிரச்சினைக்காக களமிறஙகி உள்ள ரஜினி, முதன்முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே காவிரிநிதி நீர் இணைப்பு பிரச்சினைக்காக ரூ.1 கோடி தருவேன் என்று கூறிய ரஜினி, அதை கிடப்பில் போட்டுள்ள நிலையில், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள ரஜினி முதன்முறையாக நிதி உதவி அளித்து தனது அரசியல் அஸ்திவாரத்தை போட்டுள்ளார். இதன் காரணமாக அவர் அரசியலுக்கு வருவது மீண்டும்  உறுதியாகி உள்ளது.

இன்று தூத்துக்குடி பயணமான ரஜினி, அங்கு  துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். காயமடைந்த வ்களுக்கு நிதி மற்றும் தேவையான பொருட்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் நிதி உதவி வழங்கினார்.

இதன் காரணமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி செய்யப்பட்டது.