சென்னை: ரஜினி ஏழேழு ஜென்மத்திற்கும் கட்சி தொடங்க மாட்டார், அவரது அறிவிப்பு புஷ்வானமாக போய்விடும் என  நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

ஜனவரியில் அரசியல் கட்சித் தொடங்கப்போவதகா ரஜினி அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி உள்ளன.  இந்த பரபரப்பான காலக்கட்டத்தில், ரஜினியும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால், தமிழக அரசியல் களம்  மேலும் பரபரப்பு அடைந்துள்ளது.

அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என 2017ல் தெரிவித்த ரஜினி தற்போது, தேர்தல் அறிவிப்பை 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிட்டு உள்ளார். இதையடுதது, வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

நாயினும் கேவலமான ரஜினி ரசிகர்கள்: நாஞ்சில் சம்பத் காட்டம்

ரஜினியின் அரசியல் கட்சி தொடக்கமை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், துணைமுதல்வர் ஓபிஎஸ், கூட்டணிக்கு தயார் என அறிவித்து பரபரப்பை உருவாக்கினார். ஆனால், அதற்கு அதிமுக தலைமை தடை போட்டுவிட்டது.  மேலும் பலர்,   ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கலந்த விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  திமுக, மதிமுக, அதிமுக கட்சிகளில் ஏற்கனவே பணியாற்றியவரும், இலக்கியவாதியுமான  நாஞ்சில் சம்பத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில்  அவர் கூறியதாவது,

ரஜினியின் இந்த அறிவிப்புக்கு இன்றைக்கு மட்டும் தான் ஆயுள் உண்டு. இதுவும் புஸ்வானம் ஆகிப்போய்விடும். அவர் கட்சி தொடங்குவதற்கான எந்தவிதமான வாய்ப்பும் சூழலும் அவருக்கு அமையவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கமாட்டார். பார்த்துக்கொண்டே இருங்கள். அவரது ரசிகர்களை மாற்றி மாற்றி ஏமாற்றுவது நல்லதல்ல என்று கூறினார்.

ரஜினி கட்சி கட்சி ஆரம்பிக்க மாட்டார்’ என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என செய்தியளார்கள் கேட்ட கேள்விக்கு, ” மக்களையே சந்திக்காமல் ரஜினி  எப்படி கட்சி நடத்துவார்? என எதிர்கேள்வி எழுப்பினாதர். அவர், எப்படி தன்னுடைய இயக்கத்தை முன்னெடுத்து செல்லமுடியும்?  அதனால், ஏழேழு ஜென்மத்திற்கும் தமிழகத்தில் ரஜினி கட்சி தொடங்கமாட்டார். அவருக்கு மக்கள் எழுச்சியும் உண்டாகாது. ரஜினி மன்றத்தில் இருப்பவர்கள், ஆதரிப்பவர்கள் எல்லோருக்கும் 55 வயதிற்குமேல்தான் ஆகிறது. அதனை வைத்து என்ன அறுவடை செய்யமுடியும்?

ரஜினி கட்சியால் எந்தகட்சிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு, அது ரஜினிக்குத்தான் மிகப்பெரிய பாதகம். அவருடைய உடல்நிலை ஏற்கனவே சீர்கெட்டிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறார். ’கொரோனா யாரை எப்போது தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது’ என்று அவரே சொல்லிவிட்டு, இப்போது கட்சி ஆரம்பித்திருப்பதால் பாதிப்பு அவருக்குத்தான் .

இவ்வாறு கூறினார்.

31ம் தேதி ரஜினி என்ன சொல்லப்போகிறார் தெரியுமா?: நக்கலடிக்கும் நாஞ்சில் சம்பத்