ரஜினி – ரசிகர் சந்திப்பு…  ஏற்பாடு தீவிரம்!

டிகர் ரஜினிகாந்த் ஏற்ககனவே  ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  இந்நிலையில்  இரண்டாவது கட்ட புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி வருகிற 26ந் தேதி முதல் 31ந் தேதி வரை நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த முறை சந்தித்த மாவட்ட நிர்வாகிகளை தவிர்த்து மற்ற மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு, காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் வகையில்  இடையில் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவெளி விடப்பட இருப்பதாகவும், அவர்களுக்கு மதிய உணவு ராகவேந்திரா மண்டபத்திலேயே வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, தினமும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள இருப்பதாகவும்  முதல் கட்டமாக சென்னை அருகில் உள்ள செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அதன்பிறகு மற்ற மாவட்ட ரசிகர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.