சாமியார்களுடன் ரஜினி.. இதுதான் மதசார்பில்லாத ஆன்மிகமா?: வி.சி.க. ரவிக்குமார் கேள்வி
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த், தான் தனிக்கட்சி துவங்கப்போவதாகவும், வரும் 2012 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து (234) தொகுதிகளிலும் தனகு கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் ராமகிருஷ்ணா மடம் சென்று சாமியார்களைச் சந்தித்தார்.
இது குறித்து வி.சி.க. கட்சி பிரமுகர் ரவிக்குமார் தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், “திரு ரஜினி இன்று ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று ஆசி பெற்றபோது அவரை அறிமுகம் செய்து கடைசியில் சுவாமி சொல்வதைக் கவனியுங்கள்: ” அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்னு ஒப்பனா சொல்லிருக்கார். So called secularism இல்ல” இதுதான் மதச்சார்பில்லாத ஆன்மீகமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/WriterRavikumar/status/947874126114447360