சென்னை: இந்த ஆண்டு பிறந்த நாளை, பெங்களூருவில் உள்ள தமது அண்ணன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் கொண்டாட உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமது பிறந்தநாளை கொண்டாட பெங்களூரு புறப்பட்டு உள்ளார். சில நாட்களுக்கு முன்பு கட்சி தொடங்குவதாக அறிவித்த பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால், ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட வீட்டில் சந்திக்க ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு பிறந்த தினத்தை, பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொண்டாட அவர் சென்றுள்ளார். பெங்களூருவில் வரும் 12ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, ஐதராபாத்தில் படப்பிடிப்பில் 15ம் தேதி முதல் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.