26 வருடங்களுக்குப் பின்பு இணையும் ரஜினி – மம்மூட்டி??

மிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேரளாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ தமிழ்ப் படத்தில் 26 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்தனர்.   இந்தப் படம் இருவரின் திரையுலக வாழ்விலும் ஒரு மைல்கல் எனவே சொல்லலாம்.   இருவரும் நண்பர்களாகவே வாழ்ந்திருந்தனர் என விமர்சகர்களால் பாராட்டுப் பெற படம் இது.

தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன.   இவைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை எனினும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.   ஒரு மராட்டிப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.   படண்ட்தின் பெயர் பசாயதன் எனவும் தீபக் பவே அந்தத் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்த தகவல்கள் உண்மையானால்  ரஜினிகாந்த் – மம்மூட்டி இருவருக்கும் இதுவே முதல் மராட்டிப் படமாக இருக்கும்.

இது தவிர ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘காலா’ திரைப்படத்திலும் மம்மூட்டியை ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி அணுகியதாக கூறப்படுகிறது.    ரஜினிகாந்த் தற்போது காலா படத்தை தவிர பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் 2.0 என்னும் படத்திலும் நடித்து வருகிறார்.   மம்மூட்டியும் மலையாளத்தில் தற்போது நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.