ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஆன அபிராமியின் கணவர்
சென்னை
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியாக கள்ளக்காதலால் குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டபட்டுள்ள அபிராமியின் கணவர் விஜய் நியமிக்கபட்டுள்ளார்.
சென்னையில் குன்றத்தூர் அருகில் மூன்றாம் கட்டளையில் வசிக்கும் விஜய் என்னும் இளைஞரின் மனைவி அபிராமி. இவர் பிரியாணி கடை ஊழியருடன் கொண்டிருந்த கள்ளக்காதல் காரணமாக தனது இரு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொலை செய்தார்.

அதன் பிறகு கேரளாவுக்கு தப்பி ஓட இருந்த அபிராமியை காவல்துறையினர் நாகர் கோவிலில் கைது செய்தனர்.
அபிராமியின் கணவர் விஜய் மற்றும் அவருடைய இறந்த குழந்தைகள் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவார்கள். இந்த செய்தி அறிந்த ரஜினிகாந்த் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விஜயை தனது வீட்டுக்கு கூட்டி வரச் சொல்லி ஆறுதல் தெரிவித்தார்.
தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகியாக விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். தனது தீவிர ரசிகர் என்பதால் அவருக்கு இந்த பதவியை ரஜினிகாந்த் அளித்ததாக சொல்லப்படுகிறது.