’அபூர்வ ராகங்கள் ‘’ படம் மூலம் ரஜினிகாந்த் , 45 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
ரஜினிகாந்த் போன்றே ராகவேந்திரர் பக்தரான நடிகர் ராகவா லாரன்ஸ், சூப்பர்ஸ்டார் குறித்து நெகிழ்ந்து தெரிவித்த தகவல் இது:


‘’ரஜினி சாரின் பல பாடல்கள், எனது வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்று சொல்வேன். பணக்காரன் படத்தில் இடம் பெற்ற ‘மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்’’ பாடல் எனக்குள் தன்னம்பிக்கையை விளைவித்த பாடல்.
நெருக்கடியான நேரங்களில் எனக்கு சக்தி கொடுத்த பாடல்’’ வெற்றி நிச்சயம்’.
எல்லா நடிகர்களும், தனது நூறாவது படம் , ஜனரஞ்சகமாகவும், மிகப்பெரும் வெற்றிப்படமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆனால், ரஜினி சார், தனது நூறாவது படமாக ‘ராகவேந்திரர்’ என்ற பக்தி படத்தை கொடுத்தார்.
ஒரு படப்பிடிப்பின் மதிய உணவு இடைவெளியில் எனது டான்ஸை பார்த்த அவர், மறுநாள் ‘ என்னை தனது வீட்டுக்கு வரச்சொன்னார்.
போனேன். ஒரு கடிதத்தை தந்தவர்,’ போ..போய் யூனியன்ல கார்டு எடு’’ என அனுப்பி வைத்தார்.
என்னைப்பற்றி பிரபுதேவாவிடமும் சொல்லி உள்ளார். அவர் மூலம் எனக்கு முதல் பாடல் கிடைத்தது.
அவர் இல்லையென்றால், நான் இப்போது எங்கே இருந்திருப்பேன் என்று தெரியாது.
அவர கை தட்டி, விசில் அடிச்சி ரசிச்ச எனக்கு, கார்டு எடுத்து குடுத்து ‘லைஃப’ மாத்துவார்னு நெனைக்கலே.
எனது வாழ்க்கையை அடியோடு மாற்றிய ரஜினி சார் தான் எனக்கு குருநாதர்’’
-பா.பாரதி.