சபரிமலை விவகாரம், மீடு கூறித்து ரஜினி கருத்து

சபரிமலை விவகாரம் மற்றும் மீ டூ குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் பேட்ட.  இத்திரைப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது. இந்த நிலையில் டத்தின் படப்பிடிப்பு குறிப்பிட்ட நாளுக்கு 15 நாட்கள் முன்னதாகவே முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிந்திருந்த ரஜினி, அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வாரணாசியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில்  செய்தியாளர்கள சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும்.

கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டன. ஆனாலும்  வரும் டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்பது தவறு.

மீ டூ இயக்கம் பெண்களுக்கு சாதகமானது. அதைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது” என்று ரஜினி தெரிவித்தார்.