குழந்தைகள் பாதுகாப்பு : மத்திய மாநில அர்சுகள் மீது ரஜினிகாந்த் கடும் தாக்கு

சென்னை

த்திய மாநில அரசுகள் குழந்தைகள்பாதுகாப்புக்கு அக்கறை அளிக்கவில்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆஷ்ரம் என்னும் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். இவர் குழந்தைகள் கல்வி குறித்து பல நிகழ்வுகள் நடத்தி உள்ளார். அவ்வகையில் நேற்று குழந்தைகள் அமைதி என்னும் அமைப்பு குறித்து ஒரு நிகழ்வை சென்னையில் நடத்தினார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அந்த உரையில் ரஜினிகாந்த், “இந்த பூமியில் பூத்துள்ள அழகான பூக்கள் குழந்தைகள். ஆனால் நாம் அந்த அழகான பூக்களை அழ வைக்கிறோம். வெளிநாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்காக செலவிடப்படும் பணம், நேரம், ஆகியவைகளில் 1% கூட மத்திய மற்றும் மாநில அரசுகள் செலவிடுவதிலை. அரசுகளுக்கு குழந்தைகள் மீது எவ்வித அக்கறையும் இல்லை.

குழந்தைகள் வளர்ச்சியில் அக்கறை காட்டாத நாடு நன்றாக இருக்குமா?  மத்திய மற்றும் மாநிலம் ஆகிய இரு அரசுகளும் குழந்தைகளை பார்க்கவுமில்லை, கவனிக்கவுமில்லை. அவர்கள் மீது அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. இது போல் ஒரு அரசாங்கத்தை நம்பி இனியும் பிரயோஜனம் இல்லை.

குழந்தைகள் சாலையில் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களிடம் சென்று உங்களை யார் பிச்சை எடுக்க வைப்பது எனவும் உங்களுக்கு பின் யார் யார் உள்ளனர் எனவும் காவல்துறையினர் கேட்க எத்தனை நேரம் ஆகும்? இதனாலல உண்மைகள் வெளியே வரும்.

ஒரு பெரிய மாபியா கும்பலே குழந்தைகளை வைத்து இயங்கி வருகிறது. ஆனால் அதுகுறித்து காவல்துறையோ அரசாங்கமோ கண்டுக் கொள்வது இல்லை. நாகும் கூட கண்டுக் கொள்வது இல்லை.

குழந்தைகளை கடத்திச் சென்று அனாதைகளாக்கி பிச்சை எடுக்க வைப்பது கொலை செய்வதை விட பெரிய குற்றமாகும். ஆகவே கொலை குற்றத்தை விட இதற்கு அதிக தண்டனை அளீக்க வேண்டும். குழந்தைகள் அமைதி என ஒரு அமைப்பு தொடங்கி மாநிலம் எங்கும் அரசாங்கம் செய்யாததை அமைப்பினர் செய்து வருகின்றனர்.” என பேசி உள்ளார்.