தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு ரஜினி கண்டனம்

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடச் சொல்லி நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் மரணம் அடைந்ததற்கு ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.   துப்பாக்கி சூட்டில் மாணவி ஒருவர் உட்பட 9 பேர் மரணம் அடைந்தனர்.    போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தியதாக தமிழக அரசு கூறி உள்ளது.

இந்நிலையில் இதற்கு நடிகர் ரஜினிகாந்த், மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப் போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது  கண்டிக்கத்தக்கது.  நடந்த வன்முறைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என செய்தி வெளியிட்டுள்ளார்.

தே மு தி க தலைவர் விஜயகாந்த்,  இயக்குநர் பாரதிராஜா,  கவிஞர் வைரமுத்து,  ஆகியோரும் இந்த துப்பாக்கி சூட்டுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்