திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை:
தேர்தலில் வெற்றிபெற்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது. இந்நிலையில், மாநில தலைவர்கள், தேசிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் நோக்காளர்கள் என பல தரப்பினரும் திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக வெற்றி உறுதியானதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில் திறம்பட அயராது அழைத்து வெற்றி அடைந்திருக்கும் என் அன்பு நண்பர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் புகழ் பெற வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.