Random image

குன்றத்தூர் அபிராமியின் கணவருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்

சென்னை

சென்னை குன்றத்தூர் அருகில் இரு குழந்தைகளைக் கொன்ற அபிராமியின் கணவர் விஜயை அழைத்து ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை அருகில் உள்ள குன்றத்தூரில் மூன்றாம் கட்டளைப் பகுதியில் அங்காளீஸ்வரர் கோவில் தெரு உள்ளது.   அங்கு விஜய் (வயது 30) என்னும் இளைஞர் தனது மனைவி அபிராமி (வயது 25) மற்றும் மகன் விஜய் (வயது7) மகள் கார்ணிகா (வயது 3) ஆகியோருடன் வசித்து வந்தார்.  அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணிக்கடையில் சுந்தரம் (வயது 25) என்பவர் பணி புரிந்து வந்தார்.

சுந்தரத்துக்கும் அபிராமிக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக நெருக்கம் உண்டாகியது.   இதை அறிந்த அபிராமியின் கணவர் அவரை கண்டித்துள்ளார்.   கள்ளக்காதலன் சொற்படி கணவரையும், குழந்தைகளையும் கொலை செய்ய அபிராமி முயன்றுள்ளார்.

கணவரைக் கொல்ல முடியாததால் குழந்தைகளை கொன்று விட்டு அபிராமி தப்பி ஓடினார்.   அவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அபிராமியின் கணவர் விஜய்  ஒரு தீவிர ரஜினி ரசிகர்.   அதனால் விஜயை தனது வீட்டுக்கு அழைத்து வரும்படி கூறிய ரஜினி  அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.