மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

 

அரசியல் விவகாரம் தொடர்பாக, ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘அரசியல் பற்றி பேச நேரம் இன்னும் வரவில்லை. நேரம் வரும்போது பேசுவேன்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையிலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள்  மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 38 பேர், போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்தனர்.  அவர்களுடன் தற்போது அரசியல் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார்.