சென்னை:
ஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றதாகவும், சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சிஆணையாளர்,  சென்னையில் நாள்தோறும் 12,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுட வருவதாகவும், நோய் பரவல் குறைந்து வருவதாகவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து, ரஜினி, கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு காரில் சென்ற விவகாரம் குறித்த பதில் அளித்தார்.
கடந்த  கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார்.  இது சர்ச்சையானது. அவர் ரஜினி கார் ஒட்டும் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதேசமயத்தில், ரஜினி இ பாஸ் எடுத்துதான் சென்றாரா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.  மேலும், சாமானிய மக்களுக்கு இ.பாஸ் வழங்க மறுக்கும் சென்னை மாநகராட்சி, ரஜினிக்கு மருத்துவ அவசரம் என கூறி இபாஸ் கொடுத்த விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஏற்கனவே சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு, அதுகுறித்து ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் இ பாஸ் எடுத்துதான் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்றார் என சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அவர் இ பாஸ் பெற்றது ஆய்வின் முடிவில் தெரிய வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.