தர்பார் சிறப்பு காட்சியை கண்டு ரசித்த லதா ரஜினிகாந்த்….!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வதுபடமான இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

நேற்று ரிலீசான இப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானது. ரோஹிணி, காசி, பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட பல திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் சென்னை ரோஹினி திரையரங்கத்தில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் லதா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கண்டு களித்தனர்.