[embedyt] https://www.youtube.com/watch?v=EkWJEBxzYb0[/embedyt]

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படமாக உருவாகியுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். அங்கே ரஜினிகாந்த் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று பேசுகிறார்.  உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருக்கிறார்கள்.

இந்த சர்ச்சையால் வெளியான ஒரே நாளில் 16 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில் தங்கள் தலைவரை தரைமட்டமாகத் தாக்கியுள்ளதால் #BoycottComali @RajnikanthEFans என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இந்த எதிர்ப்பால் அக்காட்சியை நீக்கப்போகிறார்களா அல்லது எதிர்கொள்ளப்போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்