அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்….!

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் கடந்த 8-ம் தேதி வெளியானது. இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த இந்தப் படம், தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பெண் சுதந்திரம், பெண்கள் மீதான இச்சமூகத்தின் பார்வையை திரையில் பேசிய அஜித்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அஜித்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

இந்தப் படம் வெளிநாடுகளில் மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ajith, Boney kapoor, H Vinodh, nerkonda parvai, red giant, Udhayanidhi Stalin
-=-