ரஜினியின் பேட்ட பட பாடல் வெளியானது: ரஜினி வாய்ஸ்

ஜினியின் பேட்ட படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட  திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும் சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, நவாஜுதீன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடந்து முடிந்தது.

 

இந்த நிலையில் சமீபத்தில் பேட்ட ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். அடுத்ததாக இன்னொரு புகைப்படமும்வெளியிடப்பட்டது.

பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின்  மரண மாஸ் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியன் மற்றும் அனிருத் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

பாடலின் இடையே ரஜினியின் வாய்ஸும்  வருகிறது. “பாக்கத்தான போற இந்தக் காளியோட ஆட்டத்த” என்று ரஜினி ஸ்டைலாக கூறுகிறார்.

பாடல் வரிகளின் நடுவில், “காலை இழுத்து உயர நினைச்சா கெட்டப்பய சார் இடியாய் இடிப்பேன்” என்று ஒரு வரி வருகிறது.

முல்லும் மலரும்  படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி, “ கெட்டப்பய சார் இந்தக் காளி” என்று அடிக்கடி கூறுவார்.  ரஜினி ஸ்டைலாக கூறிய அந்த வார்தை அப்போது மிகவும் பிரபலமானது.  தற்போது அதே போல இளமைத்துடிப்புடன் ரஜினி வந்திருக்கிறார் என்று சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக பதிவிட்டு வருகிறார்கள்.

#rajinikanth  #petta #movie #maranamass #song #released #voice

 

பாடல்: