அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை: சீமான்

நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக தகுதி அற்றவர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் சந்திப்பின் போது ஆற்றினார். இதையடுத்து வழக்கம்போல “ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார்” என்று யூகம் பரவி பலரும் கருத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரஜினி தனது உரையில் , நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட சிலரை பாராட்டிப் பேசினார். இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு  சீமான், “ஒரு நடிகராக ரஜினிகாந்த் அவர்களை நான் கொண்டாடுவேன்.  அவர் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்கட்டும், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கட்டும்.

ஆனால், அவரது மனநிலைக்கு அரசியல் ஏற்றதல்ல. அதைத் தவிர வேறு எதைச் செய்தாலும் நான் வரவேற்பேன்” என்று  சீமான் தெரிவித்தார்.

 

கார்ட்டூன் கேலரி