யார் அந்த ஏழு பேர் : ரஜினியின் திடுக்கிடும் கேள்வி

--

சென்னை

டிகர் ரஜினிகாந்த் ராஜிவ் காந்தி கொலையாளிகள் 7 பேர் யார் என செய்தியாளர்களை கேட்டுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக முருகன், நளினி உள்ளிட்டோர் 25 அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இது குறித்து தமிழக அரசு அனுப்பின மனுவை குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பாமலே மத்திய அரசு நிராகரித்தததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவரை ஆலோசிக்காமல் நிராகரிகப்பட்டதாக வந்த செய்தி குறித்து கருத்துக்களை கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த் பதிலுக்கு யார் அந்த ஏழுபேர் என கேட்டுள்ளார்.

செய்தியாளர்கள் அவருக்கு இது குறித்து விளக்கினார்கள் விளக்கிக் கூறினர்கள். அதற்குப் பிறகும் தமக்கு இது குறித்து எதுவும் தெரியாது எனவும் இந்த விஷயத்தை தாம் இப்போதுதான் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த பதில் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.