சென்னை:

டிகர் ரஜினிகாந்தி நடித்துள்ள காலா படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காஞ்சி மடாதிபதி இயற்கை எய்தியைதை  தொடர்ந்து  2ந்தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவு படத்தின் டீசரை வெளியிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மார்ச் 1ந்தேதி படத்தின் டீசர் வெளியிடப்படும் என தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் அறிவிருந்த நிலையில், பின்னர் 2ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷின்  வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில்  ரஞ்சித் இயக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள  காலா திரைப்படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 27ம் தேதி ரிலீசாகும் என்று தனுஷ் அறிவித்துள்ள நிலையில்,  இன்று (2-ம் தேதி) இரவு 12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார்.

காலா படத்தின் டீசரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

https://www.youtube.com/watch?feature=share&v=Wm_vSSlVsV4&app=desktop