ரஜினிகாந்த் வருகையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் ஜெயகுமார்

சென்னை:
ஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஊழல் என்று ரஜினி கூறுவது திமுகவைத்தான்; கட்சி ஆரம்பிப்பது அவரவர் உரிமை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.