டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த்: ஏசி சண்முகம்

சென்னை:

டிகர் ரஜினிகாந்த் இந்த வருட இறுதியில் புதிய கட்சி தொடங்குவார் என தான் நம்புவதாக  புதிய நீதிக்கட்சி தலைவரும், ரஜினியின் நண்பருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஏ.சி.சண்முகம்

கடந்த  வருடம்  டிசம்பர் 31ந்தேதி புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினி, தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். அதைத்தொடர்ந்து,  மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும்படி அறிவுறுத்தி விட்டு படப்பிடிப்பில் கவனம் செலுத்த சென்றுவிட்டார். தற்போது மீண்டும், மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஜினியின் நண்பரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான, ஏ.சி.சண்முகம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ரஜினி கட்சி தொடங்குவது உறுதி என்றவர் அதுகுறித்த அறிவிப்பு  டிசம்பர் மாதம் வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், ரஜினி தொடங்கும் புதிய கட்சியுடன் புதிய நீதி கட்சியும் கரம் கோர்த்து செயல்படும் என்று கூறினார்.

ஆளே இல்லாத  டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துற என்ற டயலாக் போல, தொண்டர்களே இல்லாமல், கட்சி நடத்தி வரும் ஏசி சண்முகம், ரஜினி கட்சியுடன் கூட்டணி என்று கூறியிருப்பது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.