’’ராணா’’வை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்..

’’ராணா’’வை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்..

9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பூஜை போடப்பட்ட திரைப்படம், ‘’ராணா’’.

வரலாற்றுப் பின்னணியில் ரவிக்குமார் உருவாக்கி இருந்த இந்த படத்தின் ஷுட்டிங் ஆரம்பமான முதல் நாளிலேயே , ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு அவர் வெளிநாடு சென்றதால், ’’ராணா’’  படம் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.

‘’ராணா’’ மீண்டும் தூசு தட்டப்படும் வாய்ப்பு உள்ளதா?’’ என கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:

‘’எந்திரன் படத்தை ரஜினி சாரும், தசாவதாரம் படத்தை நானும் முடித்து விட்டு,ராணா’’படத்துக்கு தயாரானோம். ஆனால் நடக்கவில்லை.

இதன் பின்னர் தான் ’கோச்சடையான்’’செய்தோம்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரஜினி சார் என்னை அழைத்து மீண்டும் ’’ராணா’’ படத்தின் கதையைச் சொல்லச் சொன்னார்.

கதையைச் சொன்னேன்.கேட்டார்.

’’இப்ப நம்மால பண்ண முடியுமா’ ன்னு கேட்டார். முடியும்’ ணு சொன்னேன்.

 ஆனால் அவர் மனதில் அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. அது பெரிய படஜெட் படம் .

ரஜினி சார் பண்ணினா நல்லா இருக்கும். ஆனால் அவர் மனதில் என்ன இருக்குன்னு தெரியலையே?’’ என்கிறார், கே.எஸ்.ரவிக்குமார்.

-பா.பாரதி.