கார்த்திக் சுப்புராஜ் படப்பிடிப்புக்காக அடுத்து லக்னோ செல்கிறார் ரஜினிகாந்த்

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் லக்னோ செல்கிறார்.

ரஜினி நடித்து வரும் படத்திற்கான தலைப்பு ‘தேவா’ என்றும், ‘தலைவர் 65’ என்றும்  சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில்,  இன்று மாலை ரஜினி படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலாவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு   டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. தொடர்ந்து லக்னோவில் படமாக்கப்பட உள்ளது.

படத்தின் இறுதிக்காட்சிகள் மதுரையில் படமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. நடிகை சிம்ரன் மற்றும் திரிஷா நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், நாவசுதீன் சித்திக்,  பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, குரு சோமசுந்தரம், மேகா ஆகாண்,   உள்பட இந்தி நடிகர், நடிகைகளும் நடித்து வருகின்றனர். படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ரஜினி படத்தின் தலைப்பை இன்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rajinikanth off to Lucknow for his next, கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன்!?
-=-