ரஜினிகாந்த் கூறியது சரிதான்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

--

சென்னை:

பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்து ரஜினிகாந்த் கூறியது சரிதான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக மோசமான கட்சிதான் என்று கூறி யிருந்தார். அது கடுமையான விமசர்னத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து, அதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்று கேள்வி எழுப்பிய ரஜினி, மோடிதான் பலசாலி என்பதை மறைமுகமாக கூறினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்னார்,  பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்து ரஜினிகாந்த் கூறியது சரியே என்றும், 10 பேர் அல்ல 20 பேர் வந்தால் மோடி ஒற்றை ஆளாக வெற்று பெறுவார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எந்த ஒரு விஷயத்திலும் எடுத்தோம், கவிழ்த்தோம் என ரஜினி கருத்து கூற மாட்டார் என்றவர்,  இலவசங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியது 100 சதவிகிதம் சரியே என்றும் கூறி உள்ளார்.

ஆனால், ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்யூனிஸ்டு கட்சி தலைவர் முத்தரசன்,  ரஜினி ஒரு சிறந்த நடிகர், அவருடையே பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று முத்தரசன் கூறியுள்ளார். மேலும் தவறான கருத்துகளை கூறிவிட்டு ஊடகங்கள் மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது என்று  கூறியுள்ளார்.